வகைப்படுத்தப்படாத

வேலையில்லாப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லாப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பல வருடங்களாக இந்தப் பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்னார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 2735 வெற்றிடங்கள் உள்ளன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு இரண்டு மாகாணங்களிலும் இருந்து பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது அவசியமாகும் என்றும் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

வாக்குமூலம் அளிக்க வந்தார் ரணில்

Gary Oldman to star in David Fincher’s ‘Mank’

இரண்டாயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை