சூடான செய்திகள் 1

வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

(UTV|COLOMBO)-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையில்லா பட்டதாரிகளை கலைப்பதற்காக காவற்துறையினர் இன்று பிற்பகல் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி வீதியின், உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில், ஒன்று கூடிய ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டது.

அவர்கள் இலங்கை வங்கி மாவத்தை ஊடாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து. ஆர்ப்பாட்டகாரர்கள் லோட்டஸ் சுற்றுவட்டத்தின் ஊடாக ஜனாதிபதி செயலத்தை நோக்கு முன்னேற முற்பட்ட போது , காவற்துறையினால் இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!