உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – பல்கலைகழக விரிவுரையாளர் பலி

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர திடீர் விபத்தில் உயிரிழந்தார்.

அவர் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணம் நயினாதீவிற்கு சுற்றுப்பணம் மேற்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த வேன் லொறியின் பின்புறத்தில் மோதிய விபத்தில் 46 வயதான விரிவுரையாளர் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த அவரது மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் இரண்டு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று, நேற்று (18) இரவு கட்டுப்பாட்டை இழந்து, அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி அனுரவுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது – ரிஷாட் MP

editor

ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் வெற்றி பெறுவார் – செந்தில் தொண்டமான்

editor

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்