உள்நாடுபிராந்தியம்

வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்து – இருவர் காயம் – யானை பலி

இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த வேனின் சாரதியும் பெண் ஒருவரும் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய காட்டு யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கவுடுல்ல தேசிய பூங்காவிலிருந்து ஹுருலு சூழலியல் பூங்கா நோக்கி பிரதான வீதியைக் குறுக்கறுத்துச் செல்ல முயன்ற போதே, இந்த யானை வேனுடன் மோதியுள்ளதாக கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காட்டு யானை சுமார் 12 வயதுடையது எனவும், அது 5 அடி உயரமான விலங்கு எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஹத்தரஸ்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள்!

editor

மீண்டும் மாற்றத்தை மாற்ற விரும்புகிறார்கள் – பிரதேச சபைத் தேர்தலில் போட்டி – சமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

editor

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் இறக்குமதி – பறவைகள் பூங்கா உரிமையாளருக்கு விளக்கமறியல்

editor