போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்ட நபர்கள் படிப்படியாக அரசியல் களத்தில் நுழைவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கம்பஹா பகுதியில் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசிய அரசியலில் நுழைவதற்கான தெளிவான போக்கு இருப்பதாகவும் கூறினார்.
“வெள்ளை நிற உடை அணிந்து கறுப்பு வேலை செய்யும்” இத்தகைய நபர்கள் அரசியலில் நுழைவதன் முதன்மை நோக்கம் பொது சேவை அல்ல, மாறாக அவர்களின் சட்டவிரோத வலைப்பின்னல்களை மேலும் விரிவுபடுத்துவதும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அரசியல் அதிகாரத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்துவதுமாகும் என்
எனவே, இதுபோன்ற குற்றப் பின்னணியைக் கொண்ட நபர்களுக்கு அவர்களின் கட்சிகளிலோ அல்லது தேர்தல் வேட்பாளர்களிலோ உறுப்பினர் பதவி வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய பொறுப்பாகும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தினார்.
