உள்நாடு

வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சீரற்ற வானிலை காரணமாக, கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மின்வெட்டு இல்லை

மே மாதம் முதலாம் வாரத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சு

ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்