உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட கணவன், மனைவி சடலமாக மீட்பு

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மனைவியின் சடலம் முதலில் மீட்கப்பட்டது அதை தொடர்ந்து தற்போது கணவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (17) மாலை வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் பெய்த அதிக மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி தம்பதியினர் காணாமல் போயிருந்தனர்.

நேற்று இரவு முழுவதும் பிரதேசவாசிகளால் இந்தத் தம்பதியினரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனைவியின் சடலம் முதலில் மீட்கப்பட்டது.

தற்போது காணாமல் போயிருந்த கணவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய மனைவியும், 37 வயதுடைய அவரது கணவரும் ஆவர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற அரசின் புதிய தீர்மானம்

editor

ஜனாதிபதியின் இரங்கல் செய்தி!

சுகாதார அமைச்சரின் திடீர் விஜயம்

editor