அரசியல்உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரிஷாட் எம்.பி

கொலன்னாவை, வெல்லம்பிட்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தித்தார்.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றாட, அவசியத் தேவைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் ரிஷாத் பதியுதீனுனிடம் எடுத்துக் கூறினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், தொடர்பில் தான் கவனத்தில் கொள்வதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கும் அறிவிப்பதாக ரிஷாத் பதியுதீன்இதன்போது உறுதியளித்தார்.

நேற்று (29) இரவு இடம்பெற்ற இந்த கள விஜயத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீபும் இணைந்திருந்தார.

Related posts

கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!