உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு படகுகள் வழங்கி வைப்பு!

சப்ரகமுவ மாகாணத்தில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு
இம்மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு படகுகளை வழங்குவதற்கு சபரகமுவ மாகாண சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இன்றையதினம் (24)
படகுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு சபரகமுவ மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 8 படகுகள் வழங்கி வழங்கப்பட்டன.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.

இதற்குத் தீர்வாக, Dry Dam கொள்கை உட்பட பல வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் புஷ்பகுமார திசாநாயக்க, குருவிட்ட பிரதேச சபைத் தலைவர் விகசித புஷ்பசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் மோதி விபத்து – 6 பேர் காயம்

editor

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் 318 ஆக அதிகரிப்பு

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு