உள்நாடு

வெள்ள நிவாரணத்திற்கு பிரதமர் பணிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்

editor

ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்!

editor

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை