விளையாட்டு

வெளுத்து வாங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி

(ஃபாஸ்ட் நியூஸ் | மான்செஸ்டர்) – இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1:2 என்ற கணக்கில் இழந்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது போட்டியில் சில தவறான முடிவுகளை எடுத்து தோல்வி அடைந்தது.

மூன்றாவது போட்டியிலும் அதே தவறுகளை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இழந்து தோல்வி அடைந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 369 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 197 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 226 ஓட்டங்களை எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 37.1 ஓவர்களில் 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related posts

இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை UNICEF க்கு வழங்கியது அவுஸ்திரேலியா

நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் உறுப்பினராக திலான் சமரவீர

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க