உள்நாடுசூடான செய்திகள் 1

வெளியாகியது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

இந்த பரீட்சைக்கு மொத்தமாக 333,183 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும் அடங்குவர்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவை நியமிப்பது குறித்த பிரேரணை சமர்ப்பிப்பு