உள்நாடு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – ஒருவர் பலி – 19 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே இன்று (17) காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸில் பயணித்த வெளிநாட்டினர் 19 பேர் காயமடைந்து தங்காலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் சுமார் 30 வெளிநாட்டு பிரஜைகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று