உள்நாடு

வெளிநாடு செல்லத் தடை – அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகர் தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்த வழக்கு ஓகஸ்ட் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Related posts

காட்டுப்பகுதியில் மீன் கழிவுகளை வீசி சென்ற வாகனம் – தக்க பதிலடி கொடுத்த மக்கள்

editor

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இவைதான்

இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு