அரசியல்உள்நாடு

வெளிநாடு செல்ல தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தும் திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தமது கருத்துக்களையும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட திகதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வார் என்று அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related posts

இதுவரை 2,564 பேர் குணமடைந்தனர்

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது – காரணம் வௌியானது

editor

பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராகக் கூட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor