உள்நாடு

வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான அறிவிப்பு

(UTV|கொழும்பு)- தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று நாடு திரும்பியுள்ள நிலையில் மீண்டும் தொழிலுக்கு செல்ல முடியாமல் இருக்கும் பணியாளர்களின் தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பிய பணியாளர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 17 திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 7,000 தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 541 பேர் கைது

IMF ஒப்பந்தம இப்போதைக்கு அவசியம் இல்லை

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]