உள்நாடு

வெப்பத்தினால் மன நோய் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – வெப்பத்தினால் மன நோய் அதிகரிக்கும்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனூடாக மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூமி ரூபன், இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கின்றார்.

இதற்கிடையில், மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவாக இருக்கும் என்றும் அதனால் அவர்கள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி அநுர

editor

பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி