வகைப்படுத்தப்படாத

வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு பயணத் தடை

(UTV|VENEZULEA)-தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோவிற்கு (Juan Guaidó) அந்நாட்டு உயர் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

அத்துடன், குவைடோவின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ தம்மைத் தாமே அறிவித்ததன் பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை நிலையையடுத்து, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோவை அங்கீகரித்திருந்தன.

இந்தநிலையில், எதிர்வரும் 8 நாட்களுக்குள் தேர்தலுக்கு அழைப்பு விடுக்காத பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் குவைடோவையே ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்வதாக குறித்த நாடுகள் அறிவித்துள்ளன.

இந்தப் பின்னணியில், ஜூவான் குவைடோவுக்கு எதிராக பயணத்தடை மற்றும் வங்கி கணக்கு முடக்கம் என்பனவற்றுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

72 வயது மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்

சிங்கத்தின் கோரப்பிடியில் சிக்கிய மனிதன்…

Fuel price reduced