உலகம்

வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் – இருவர் பலி – வெனிசுலாவில் சம்பவம்

வெனிசுலா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணத்தின் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு ஓடுதளத்தை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் விழுந்ததையடுத்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களுக்கு விசேட உரை

புனித அல்குர்ஆனை எரித்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

editor

ஒரே டோஸ் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு அனுமதி