வணிகம்

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV|JAFFNA) வெங்காயத்தின் விலை யாழ். மாவட்டத்தில் சுமார் 50 வீதத்தினால் வீழ்ச்சியுற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

உற்பத்தி செலவும் விற்பனை விலையும் ஒரே மட்டத்தில் காணப்படுவதால் விவசாயிகள் பெரும் இன்னலை எதிர்நோக்கியுள்ளனர்.

ஒரு கிலோகிராம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 60 முதல் 80 ரூபாவிற்கே விற்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் 1500 ஹெக்டயர் நிலப்பரப்பில் இம்முறை வெங்காய செய்கை பண்ணப்பட்டுள்ளது.

 

Related posts

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3, 960 கோடி ரூபா வருமானம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

நள்ளிரவு முதல் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு