உள்நாடுபிராந்தியம்

வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி பஸ் விபத்து – 14 பேர் வைத்தியசாலையில்

சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர-கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20) காலை காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்தனர். மேலும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் விபத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது.

சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்

மீண்டும் பானுக இலங்கை அணியில்

2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு