உள்நாடு

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் – சட்டத்தரணி நிறஞ்சன்

(UTV | கொழும்பு) –

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில் அது தொடர்பாக இன்று தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது நாள் அகழ்வு நேற்றைய தினம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 39 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது நான்கு அடி, பதின்நான்கு அடி நீள அகலமுள்ள குழியில் அகழ்வுப்பணி இடம்பெற்று வருகின்றது. இது தமிழீழ விடுதலை புலிகளின் உடலங்கள் என நம்பப்படும் மனித எலும்புகூட்டு தொகுதி எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் வீதிக்கு மேற்கு பக்கமாக உள்ள வீதிக்குள் மனித எச்சங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அது தொடர்பாக நீதிமன்றில் இன்று ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று இது தொடர்பாக ஒரு தீர்வினை பெறவிருக்கின்றது.

குறித்த அகழ்வுப்பணியானது இரண்டாம் கட்டமாக தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. இன்றுடன் இந்த முதலாம் கட்டம் நிறுத்தப்படலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது.அதற்கான செலவுத்தொகை தீர்மானிக்கப்படும்.
அத்தோடு பெருமளவான மனித எச்சங்கள் அந்த பகுதிக்குள் இருக்கலாம் எனவும் அச்சம் அடையப்படுகிறது. இந்த அகழ்வுப்பணி இன்றும் தொடர இருக்கின்றது. இதுவரை விடுதலை புலிகள் என சந்தேகிக்கும் 39ஆண், பெண் மனித உடல் கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

editor

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரிய கடிதத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு!