சூடான செய்திகள் 1

வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக விசேட சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 918 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வருடத்தின் நவம்பர் மாதம் வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,609 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடம் திறந்து வைப்பு…

பிரித்தானிய மஹாராணியின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர்

தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை பெயரிடுதல் இன்று(21)