உள்நாடுபிராந்தியம்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று குண்டுகள் மீட்பு – முன்னாள் இராணுவ கொமாண்டோ கைது

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள முன்னாள் இராணுவ கொமாண்டோ ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது குறித்த முன்னாள் இராணுவ கொமாண்டோ கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவற்றை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் நாமல் ராஜபக்ஷ

editor

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!  

காஸா சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை