உள்நாடு

வீட்டிலிருந்து பணியாற்றினால் சம்பளத்தில் குறைப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணியமர்த்துவது மட்டுப்படுத்தப்பட்டால், அதற்கேற்றவாறு வீட்டில் இருந்து பணியில் ஈடுபடுமாயின் சம்பளம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இதனை, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது அரச உத்தியோகத்தர்களை அழைப்பதை கட்டுப்படுத்த முன்வருபவர்கள் அவ்வாறான சம்பளக் குறைப்புக்கு இணங்கினால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட செலவில் பணிக்கு வருபவர்களுக்கும், செலவின்றி வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்குவது நியாயமற்றது என்றும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

editor

தரம் 11, 13 மாணவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை

சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!