உள்நாடு

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’

(UTV | கொழும்பு) – வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 615,902 ஆக உயர்வடைந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நேற்று முன்தினம் கொவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,544 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் கருத்திற்கொண்டு கைதிகளை விடுவிக்குமாறு, கோரிக்கை

கொழும்பு கிராண்ட்பாஸில் 23, 24 வயதுடைய சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

editor

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்கும் மில்கோ