உள்நாடு

வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயும் மகனும் ரயிலில் மோதி படுகாயம்

பெந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் மோதியதில் 39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனும் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பெந்தோட்டை பகுதியில் வசிக்கும் தாயும் மகனும் நேற்று (31) இரவு பெந்தோட்டை கடற்கரையில் இடம்பெற்ற வாணவேடிக்கையை கண்டுகளிக்கத்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயது குழந்தையின் இடது கை பகுதி காயமடைந்த நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடிப்படை சிகிச்சையின் பின்னர் தாயும் மகனும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெந்தோட்டை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமண செய்தவருக்கு நேர்ந்த கதி: சினிமா சம்பவம் போல்

கமத்தொழில் அமைச்சின் விவசாய பிரிவு மீண்டும் பத்தரமுல்லைக்கு

கொரோனா பலி எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு