உள்நாடுவீடியோ

வீடியோ | வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது

பத்தரமுல்லை – தியத உயனவிற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர், தனது கையில் இருந்த ஆயுதம் போன்ற உபகரணத்தைக் கொண்டு தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

நேற்று (12) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, தாக்குதல் நடத்திய சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் செலுத்துனரை வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பின்தொடர்ந்து சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபராவார் என்பதுடன், அவர் இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Related posts

நாடளாவிய ரீதியாக இன்று ஊரடங்கு அமுலுக்கு

விஷேட குழுவை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor

சம்பத் மனம்பேரி தொடர்ந்தும் தடுப்பு காவலில்

editor