அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா!

புத்தளம் அல்-காசீம் சிட்டி, ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (24) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மேற்படி வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்வில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல் அமீரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட முக்கியஸ்தர்கள், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட புத்திஜீவிகளும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்று விழாவினை சிறப்பித்திருந்தனர்.

-ஊடகப்பிரிவு

வீடியோ

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]

லாஃப்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

editor

விஜயகலாவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு