அரசியல்உள்நாடு

வீடியோ | ரிஷாட் எம்.பி மனிதநேயத்துடன் கூடிய ஒருவர் என்பதை துணிந்து கூறமுடியும் – தமிழ், சிங்கள 20 குடும்பங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வில் வலவகன்குணவெவ தர்மரத்ன தேரர்

இந்த நாட்டில் தமிழ் மொழியில் பேசுவதற்க்கு என்னால் முடியாது போனது குறித்து கவலை அடைவதாக தெரிவித்துள்ள மிஹிந்தல ரஜ மஹா விகாரயின் பிரதம சங்கநாயக்க கலாநிதி வளவககுனுவேவெ தர்மரத்ன தேரேர் பாடசாலைகளில் ஆரம்பம் முதல் தமிழை சிங்களவர்களுக்கும்,சிங் களத்தை தமிழ் பேசும் மாணவர்களுக்கும் கற்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில், வருமைக்கோட்டிற்குட்பட்ட 20 தமிழ், சிங்கள குடும்பங்களுக்கான திருமண வைபவம் நேற்று (07) வவுனியா நகர சபை மண்டபத்தில், கட்சியின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முத்துமுஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

மேலும் மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதி Dr. வலவகன்குணவெவ தர்மரத்ன தேரர் உரையாற்றுகையில் –

நிகழ்வில் என்னை கலந்து கொள்ளுமாறு ரிஷாத் எம். பி. அழைப்பு விடுத்தார்.

நான் அந்த அழைப்புக்கு பதில் கொடுத்து வருகை தந்துள்ளேன்.. இங்கு வந்த பிறகு தான் கண்டேன்.

இப்படி ஒரு அருமைய்யான ஏற்ப்பாட்டினை.
இன்று எமது நாட்டுக்கு தேவை இவ்வாரான முன்மாதிரிமிக்க பணிகள் தான்.

ரிஷாட் எம். பி. இந்த மாவட்ட மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை பெருமதியானது, இவர் ஒரு மனிதநேயத்துடன் கூடிய ஒருவர் என்பதை துணிந்து கூறமுடியும்.

இஸ்லாமியர்களுக்கு உதவி புரிய இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன, தமிழ் சகோதர மக்களுக்கு உதவி புரிய டயஸ் போரா உள்ளது.

ஆனால் துரதிஷ்டம் சிங்கள மக்களுக்கு உதவி செய்ய எவரும் இல்லை. இருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் வெறும் வாய் பேச்சுள்ள வர்கள் மட்டுமே, ஆனால் ரிஷாட் எம். பியின் சேவை இனம் கடந்தது என்பதற்க்கு இந்த பணி போதுமானது.

நான் இங்கு அரசியல் பேச வரவில்லை.ஒருவர் நல்ல ப்பணியினை செய்திருக்கின்றார். அதனை பாராட்டுவது பொருத்தமல்லவா ?,
இன்று மக்களாகிய எமக்கு பொறுப்பிருக்கின்றது. அரசு அதனது பணிகளை செய்யட்டும்.அதுபோல் இன ஒற்றுமையுடன், காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க புரிந்துணர்வு அவசியம்.

அதற்கு மிகவும் முக்கியம் மொழி புரிதலாகும்.
அதனை ஏற்படுத்தாத வரை எந்த பொருளாதார மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுத்தும் அது வெற்றியாளிக்கப்பபோவதில்லை.

வவுனியாவில் இடம் பெரும் இந்த திருமண நிகழ்வில், சிங்களம் மற்றும் தமிழ் மணமக்கள் 20 ஜோடிகள் திருமண பந்தத்தில் இனைக்கின்றனர்.

இவர்களின் திருமண செலவு மற்றும் அவர்களுக்கான அன்பளிப்பு தொகை என்பனவற்றை வெளிநாடுகளில் உள்ள தனவந்தர்களை அணுகி எமது நாட்டுக்கே றிசாட் எம். பி.கொண்டு வந்துள்ளார். அதுவும் அவர் சாராத மாதத்திற்கு கொடுத்துள்ளார்.

இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய பதிவாகவே நான் நோக்குகின்றேன் என்றும் அவர் இதன் போது கூறினார்.

இந்த நிகழ்வில் மத தலைவர்கள், வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டிபன், முன்னாள் பிரதி அமைச்சர் ப்ரேமரட்னே சுமதிபால மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையி லானவர்கள் கலந்து கொண்ட னர்.

புதிய தம்பதிகளுக்கு இங்கு வருகை தந்தவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனார்.

நிகழ்ச்சியினை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஹிஷாம் சுகைல் சிறப்புற தொகுப்பு வழங்கினார்.

வீடியோ

Related posts

தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வீட்டுக்கு

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்