உள்நாடுவீடியோ

வீடியோ | பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.

உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் அவர்களின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

வீடியோ

Related posts

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்

தினேஷ் குணவர்தன ஐ.நா வில் இன்று  உரை

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா பெற்றுத் தரும் ஆதரவுகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் – சஜித்

editor