கொழும்பின் இரு பிரபல பாடசாலைகளான, ஹமீட்-அல்-ஹுஸைன் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான பாரம்பரிய உதைப்பந்தாட்ட போட்டியான ‘ஹெரிடேஜ் டெர்பி’ எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இந்த போட்டியை முன்னிட்டு, போட்டியை ஒழுங்குபடுத்தும் ஹெரிடேஜ் டெர்பி அமைப்பின் வாகன ஸ்டிக்கர் வெளியீட்டு விழா நேற்று (19) வெள்ளவத்தை மரைன் கிரில் (Marine Grill) வளாகத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஹமீட்-அல்-ஹுஸைன் மற்றும் ஸாஹிரா கல்லூரிகளின் பழைய மாணவர்கள், மாணவர் சங்கங்கள், மற்றும் இரு பாடசாலைகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாகன ஸ்டிக்கரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்துடன், இந்த வருட ஹெரிடேஜ் டெர்பி போட்டிக்கு உற்சாகத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக விழா அமைந்தது.
பாடசாலைகளுக்கிடையிலான நட்பும், போட்டியின்மூலமான ஒற்றுமையும் பலப்படுத்தும் நோக்குடன் ஹெரிடேஜ் டெர்பி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இந்த போட்டிக்கான ஊடக அனுசரனையை UTV HD வழங்குகின்றது.
வீடியோ