அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கக்கூடிய திட்டங்களை கைத்தொழில் அமைச்சு செயற்படுத்தினால் அம்பாறை மாவட்ட விவசாயிகள் நெல் உற்பத்தியை விட்டுவிட்டு கரும்புச் செய்கையில் ஆர்வம் காட்டுவார்கள் என கைத்தொழில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி பதவி ஏற்று முதலில் மேற்கொண்ட மாபியா சீனி மாபியாவாகும்.
அவருக்குரிய தொழில் அதிபர்களுக்கு வரி விலக்களித்து பெரும் சீனி மோசடி நடைபெற்ற வரலாறு நமது நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்றது.
ஆனால் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் சிறந்த முறையில் பணிபுரிந்து வருகின்றகைக்காக அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கக் நான் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வமைச்சு ஊடாக நமது நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ள அமைச்சாகும் என தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவிக்கையில்,
ஏனெனில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிங்குராணை கல்லோயா தனியார் நிறுவனத்தால் கரும்பு உற்பத்தி செய்யப்படும் செயற்பாடுகளில் அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ அமைச்சர் அவர்களுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முன்வைத்த கோரிக்கைக்கு அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்து கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் விஷேட கூட்டம் ஒன்றை நடாத்தி அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் உண்மையான நிலைமையினை அறிந்ததுடன் சீனி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளின் விபரங்களையும் கரும்புச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் காணிகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் விஷேட குழுவொன்றை நியமித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், மூத்த நில அளவையாளர் மற்றும் நில ஆணையாளர் ஆகியோர் அடங்கிய குழு, கரும்பு விவசாயிகள் பயிரிடும் நிலத்தின் பரப்பளவு, தொழிற்சாலையால் பயன்படுத்தப்படும் நிலத்தின் பரப்பளவு, காலியாகவுள்ள நிலத்தின் பரப்பளவு, பிற சாகுபடிகளுக்குட்பட்ட நிலத்தின் பரப்பளவு, விவசாயிகளின் நிலங்களின் உரிமை மற்றும் கல்லோயா பிளாண்டேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தின் பரப்பளவு குறித்து விரிவான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நிலத்தை நடைமுறையில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதன்படி, பேரில் அம்பாறை, தமன, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை மற்றும் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுகளில் சீனி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் கையடக்க ஜிபிஎஸ் (GPS) பயன்படுத்தி தரவுகளைச் சேகரித்து, மூத்த நில அளவையாளர் மற்றும் தொடர்புடைய பிரதேச செயலாளர்களின் பங்கேற்புடன் ஒரு கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஹிங்குராணை சீனி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கையின்படி 819 ஹெக்டேர் நில வேறுபாடு உள்ளது.
பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்ட உரிமங்களில் “கரும்பு சாகுபடிக்கு மட்டும்” என்று கூறும் நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவசாயிகள் பயிரிடும் 5729 ஹெக்டேர் நிலத்தில், 224 ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து மீட்கப்பட்டு நிறுவனம் கரும்பு பயிரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
