உள்நாடு

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் விளையாட்டு துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் போக்குவரத்து தொடர்பான வழக்கு ஒன்றுக்காக தாம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது குறித்த பெண் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, போலி துப்பாக்கியை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் அவரது அடையாள அட்டையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவருக்கு எவ்வித வழக்கும் நேற்றைய தினம் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இல்லாத வழக்கை இருப்பதாகக் கூறி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தமை மற்றும் போலி துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் இன்றைய (28) தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஹிருணிகாவை கைது செய்ய தேவையில்லை – மீளப்பெறப்பட்ட பிடியாணை!

editor

ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது – சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்பவே முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor