உள்நாடு

வில்பத்து வழக்கு ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதலில் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று (23) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் 27 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது முற்றாக சட்டத்திற்கு மாறானது என்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

உலமா சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் தெரிவு

editor

8 பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!