உள்நாடு

விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜ முத்துடன் இருவர் கைது

கொழும்பு – கொம்பெனித் தெரு ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை மத்திய கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 170 கிராம் கஜமுத்துவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட கஜமுத்துவுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொம்பெனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 31 மற்றும் 27 வயதுடைய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பெனித் தெரு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

தீயில் எரிந்த 19 வயதுடைய இளம் பெண் மரணம்

editor