வகைப்படுத்தப்படாத

விரைவில் ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் ஜே.வி.பி

(UDHAYAM, COLOMBO) – அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தாமதமடைந்து வருகின்றன.

இதனை துரிதப்படுத்தும் நோக்கில் தமது கட்சி இந்த சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி

வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்

Bambalapitiya Hit-and-Run: AG files indictments against driver