உள்நாடு

விரைவில் அரச ஊழியர்களின் வேலை நாட்களில் குறைப்பு

(UTV | கொழும்பு) –  அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையை ‘வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக’ மாற்றுவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்கள் உடல் ரீதியாக பணிக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் 4 நாட்களாக குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று(05) இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

தேங்காய் எண்ணெய் மோசடி – அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவும் – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

editor

மகர சிறைச்சாலை கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor