உள்நாடு

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கிற்கு தினம் குறிப்பு

(UTV|கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இன்று (12) உத்தரவிட்டார்.

2009 ஜனவரி 01ஆம் திகதி முதல் 2014 டிசம்பர் 31ஆம் திகதி வரை அமைச்சராக இருந்த காலப் பகுதியில் தனது சம்பளத்தின் மூலம் சம்பாதிக்க முடியாத 74,480,017 ரூபா (சுமார் ரூ. 7.5 கோடி) பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்ததாக குற்றம் சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தற்போதைய ஆட்சியாளர்கள் தோல்வி அடைவது நிச்சயம் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

editor

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை