வகைப்படுத்தப்படாத

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு

(UTV|ETHIOPIA) தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற  போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 149 பயணிகள் உட்பட 157 பேர்  உயிரிழந்தனர்.

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமான குறித்த விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எத்தியோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடல்களை வைத்து விபத்துக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

காஷமீரில் ஊரடங்கு உத்தரவு

Palali Airport to upgrade at a cost of Rs. 22 billion [VIDEO]

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது