உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

அதிக விலைக்கு டைல்ஸ் விற்பனையா? அறிவிக்க தொலைபேசி இல

2024 வரவு செலவு திட்டம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்