சூடான செய்திகள் 1

விபத்தில் காவற்துறை அதிரடி படையில் பணிபுரிந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணமடுவ – சிலாபம் வீதி கொன்வல கந்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையில் பணிபுரிந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

31 வயதுடைய உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆண்மடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர

போதைப்பொருள் கப்பலை சிறைப்பிடத்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பாராட்டு!

மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் ‘யீயீ’ பென்டா