உள்நாடுபிராந்தியம்

விநியோகத்திற்கு தயார் நிலையில் இருந்த கேரள கஞ்சா – 6 பேர் கைது

வத்தளை, பள்ளியவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 39 கிலோகிராம் கேரள கஞ்சாவை வத்தளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விநியோகத்திற்கு தயார் நிலையில் போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததோடு, சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

களனி பிரதேச பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க, களனி மாவட்ட பொறுப்பதிகாரி பிரசன்ன சில்வா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வத்தளை தலைமை பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்க உள்ளிட்ட குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

TRINCO_வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி மூதூரில் கவனயீர்ப்பு

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

editor

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா