வகைப்படுத்தப்படாத

வித்தியாவின் படுகொலை வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல்

(UDHAYAM, COLOMBO) – பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிபதி பாலேந்திரன் சசிமஹேந்திரன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட இந்த விசாரணை மன்றில், நீதிபதிகளாக அன்னலிங்கம் ப்ரேம்சங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 22ம் திகதி பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் இந்த விசாரணை மன்று நியமிக்கப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி 18 வயதான சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பில் 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக கடத்தல், கொலை, குழு பாலியல் வன்முறை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related posts

பதுளை மாநகர சபை தேர்தல் முடிவுகள்

ප්‍රහාරයෙන් පසු කටුවපිටිය දේවස්ථානයේ පළමු දේවමෙහෙය

Three-month detention order against Dr. Shafi withdrawn