வகைப்படுத்தப்படாத

வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேக நபர் விளக்கமறியலில்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நேற்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போது காவல்துறை அதிகாரியொருவரை திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

North Korea missile launch ‘a warning to South Korean warmongers’

Murray and Williams wow Wimbledon again to reach last 16

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்!