கேளிக்கை

விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன் 

(UTV |  சென்னை) – ‘லைகர்’ படத்தில் மைக் டைசன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது.

கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘லைகர்’. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். தற்காப்புக் கலை, சண்டைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

இந்திய சினிமாவில் முதல் முறையாக இப்படத்தில் மைக் டைசன் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கவுரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மைக் டைசன் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு இந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மைக் டைசனுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா, “இந்த மனிதருடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும் எனக்கான நினைவுகள். அதிலும் இந்தப் புகைப்படம் மிகவும் ஸ்பெஷல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த இளம் நடிகை

குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும்-ஹன்சிகா

4 மணிநேரம் மேக்கப், 120 உடை-கீர்த்தி