உலகம்

விஜயின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் – த.வெ.க மாவட்டச் செயலாளர் கைது

கரூரில் விஜய்யின் த.வெ.க கட்சிக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததோடு பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

இந்நிலையில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க இவ் விவகாரம் தொடர்பில் த.வெ.க கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதியழகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, கரூரில் வைத்து தனிப்படை பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Related posts

டிவி தொடர்களில் ஆபாசம் : பாகிஸ்தானில் புதிய சட்டம்

தடுப்பூசி செலுத்தாவிடின் இராஜினாமா செய்யுங்கள் : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் – தாஜ்மஹால் மூடப்பட்டது