உள்நாடு

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு)- குருநாகல் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பில் வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

50 பயணிகளுடன் பயணித்த பஸ் – திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்

editor

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் : புதிய வழிகாட்டல்கள்