உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் ஹெரொயினுடன் இளைஞன் கைது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதி, மீராவோடை எனும் முகவரியை சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2.150 மில்லி கிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வியாபாரியை கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பொருளுடன் சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர் பொதைப்பொருள் வியாபாரி என்று ஆரம்பக்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்.

Related posts

அமைச்சர் உபாலி பன்னிலகேவுக்கு எதிரான மனுவின் விசாரணை திகதி அறிவிப்பு

editor

“பாராளுமன்றில் மோதல்” லன்சா மீது கைவைத்த சமிந்த- சமிந்தவை பாராளுமன்றிலிருந்து வெளியேற்றிய சபாநாயகர்

விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்

editor