மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை வேன் ஒன்றும் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வேன் அதே திசையில் முன்னால் சென்ற பவுசர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
